search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேலூர் அரசு ஆஸ்பத்திரி"

    கண்ணமங்கலம் அருகே குடிபோதையில் கிணற்றில் விழுந்த மேஸ்திரி பரிதாபமாக உயிரிழந்தார்.

    கண்ணமங்கலம்:

    சந்தவாசல் அருகே உள்ள ஆத்துவாம்பாடி கிராமத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரி காசி மல்லி (வயது 50) என்பவர் கடந்த 11-ந் தேதி உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு, குடிபோதையில் மொபட்டை தள்ளிக்கொண்டு வந்தார்.

    அப்போது வழியில் கிணற்றில் தவறி விழுந்து விட்டார். அக்கம் பக்கத்தினர் காசிமல்லியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை இறந்து விட்டார்.

    இது தொடர்பாக சந்தவாசல் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    வேலூர்:

    மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் இன்று புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை அளித்து விட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அரசு டாக்டர்கள் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார். செயலாளர் சந்தரமோகன் முன்னிலை வகித்தார். ஒருங் கிணைப்பாளர் ஸ்ரீகாந்த் வரவேற்றார். இதில் 100-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

    இதேபோல் சம்பள உயர்வுக்கோரி வேலூர் பெண்ட்லெண்ட் பழைய அரசு ஆஸ்பத்திரி டாக்டர்களும் தர்ணா போராட்டம் செய்தனர். புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை அளித்து விட்டு நோயாளிகளுக்கு எந்தவித சிரமமும் ஏற்படதாபடி டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மருத்துவ அலுவலர் செந்தாமரை கண்ணன், இ.எஸ்.ஐ. மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெய கீதா, டாக்டர்கள் பிரகாஷ் அய்யப்பன், சதீஷ், சந்தோஷ் உள்பட 20-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கலந்து கொண்டனர்.
    ×